வண்ணம் முளைத்த விரல்கள்
மழை நனைத்த....
இலைகள் அடர்ந்த...
கிளை தெரியா....
பூபாகம்....
கால் முளைத்த
அலகில்
தேன் உண்ணும் சிட்டுகள்!
அரவமற்ற
முன் மாலைப் பொழுது
இத்தனையும்
எழுதும் பொது
முளைக்காத வண்ணம்
உனக்கு
ம்... என
ஒற்றை சொல் எழுத....
வண்ணம் முளைத்த
விரல்களாயிற்று!