தத்து பித்து
நான் இவர்களுக்கு
எட்டா (வது) அதிசயமானேன் !?
நியூ ஏஜ் பெற்றோர்களின்
தத்து பிள்ளைகளாய்
பாம்பும் உடும்பும்
வன விலங்குகளுக்கு
வரிந்து கட்டும்
மனவிலங்குகள்!
அம்மாவோடும் அப்பாவோடும்
பிறந்தவர்களை
மறந்தவர்கள்
பதினேழு பிள்ளை பெற்றவரைப்
பற்றிய
இணையத் தளச் செய்தியை
மறக்க மறுக்கிறார்கள்.
இந்த அதிசயங்கள் - என்னை
அதிசயிக்கவில்லை - என்ற
நான்
இவர்களுக்கு
எட்டா(வது) அதிசயமானேன்!
நல்ல பதிவு. வாழ்த்துக்கள் வித்யா.
ReplyDelete