Thursday, November 11, 2010
சந்திரன்
சூரியன் மறைந்து
சூழ்நிலை தெரிந்து
சந்திரன் ஓடி வருகிறான்
செய்தி தெரிந்து
காரணம் சொல்லி
சோற்றை ஊட்டினாள்
என் அம்மா!
பூமியைச் சுற்றி
பூவாய் மலர்ந்து
மலை மேல் ஏறினான்
மதி!
அவன் வருவது தெரிந்து
சட்டியை எடுத்து
தாவி ஓடினாள்
என் பாட்டி!
- அரிமா
மேலே உள்ள கவிதை என் மகன் அரிமா எழுதியது. கடந்த வாரம் திண்டுக்கல் சென்று திரும்பி கொண்டிருந்தபோது அவனிடம் எதாவது எழுது என்று கூறினோம். எதிரில் தெரிந்த பௌர்ணமி நிலவை பார்த்து இதை எழுதினான். யார் அந்த பாட்டி என்று கேட்டோம். பதில் ஆச்சர்யமாய் இருந்தது! நீங்களும் அனுமானிக்க முடிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.
Subscribe to:
Post Comments (Atom)
அரிமா உண்மையில் அரிமாதான்! படைப்பில் ஓசைநயம் நன்றாக இருக்கிறது. தாவி ஓடிய பாட்டி பரிதியா? இருளா?
ReplyDeleteஅரிமாவின் எண்ணம் அருமை. வாழ்த்துக்களை சொல்லுங்கள். பாட்டி ஓடியது தோசை சுடவா, பெறவா?
ReplyDeleteஅரிமாவின் பா அருமையாக வந்துள்ளது
ReplyDeleteகடைசி இரண்டு வரிகள் இன்னும் சந்தம் வரவேண்டும்
அன்புடன்
பாமயன்
தெளிவான கவிதை நடை... என் சிற்றறிவால் பாட்டி யார் என அறிய முடியவில்லை... இருளாய் இருக்கலாம் என்பது என் ஊகம்...
ReplyDelete